திருப்பதிக்கு நெய் வழங்கிய நிறுவனத்தில் அதிரடி ரெய்டு

64பார்த்தது
திண்டுக்கல்லில் உள்ள ஏ. ஆர். டெய்ரி ஃபுட் நிறுவனத்தில் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு உள்ளனர். திருப்பதி கோவிலில் வழங்கப்படும் லட்டில் மீன் எண்ணெய், விலங்கு கொழுப்பு கலக்கப்பட்டு இருப்பதாக ஆய்வக பரிசோதனைகள் உறுதியானது.

மேலும் லட்டு தயாரிக்க பயன்படுத்தக்கூடிய நெய்யில் தான் இந்த விலங்கு கொழுப்புகள் கலக்கப்பட்டு இருப்பதாக அந்த ஆய்வு முடிகள் தெரிய வந்தது.

திருப்பதி கோவிலுக்கு கடந்த ஜூன் மாதம் நெய் வழங்கிய திண்டுக்கல் சேர்ந்த ஏஆர் ஃபுட்ஸ் என்ற நிறுவனம் தான் என்பது தெரிவந்தது.

இந்நிலையில், திண்டுக்கல் ஏ. ஆர். டெய்ரி ஃபுட் நிறுவனத்தில் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய உதவி செயற்பொறியாளர் அனிதா ஆய்வு மேற்கொண்டு உள்ளார்.

பால் பொருட்கள் தயாரிப்பின் போது வெளியேறும் கழிவுநீர் மாதிரிகளை ஆய்வு செய்ய உள்ளதாகவும், குறைகள் இருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி