திண்டுக்கல்: கிணறை ஆக்கிரமித்துள்ள ஊழியர்.. மக்கள் போராட்டம்

58பார்த்தது
திண்டுக்கல்: கிணறை ஆக்கிரமித்துள்ள ஊழியர்.. மக்கள் போராட்டம்
என். கோவில்பட்டியில் ஊராட்சி சார்பில் குளத்தின் கரையில் அமைக்கப்பட்ட ஆழ்துளை கிணறை ஆக்கிரமித்து பயன்படுத்த விடாமல் தடுக்கும் அரசு ஊழியர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். நுாத்துலாபுரம் என். கோவில்பட்டியில் ஊராட்சி சார்பில் ரூ. 5 லட்சத்தில் செல்லாண்டி அம்மன் கோயில் குளக்கரையில் 800 அடி ஆழத்தில் ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டது. இதை அருகிலுள்ள தோட்டத்துக்காரர் ஆக்கிரமித்து போர்வெல்லில் குழாய்கள், மோட்டார் பம்புகள் அமைக்க விடாமல் தடுத்துவருகிறார். இதனால் மழைகாலத்திலும் போதிய குடிநீர் கிடைக்காமல் மக்கள் அவதியடைகின்றனர். நேற்று(அக்.20) குளத்திற்குள் இறங்கி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி