செம்பட்டி: மின்வேலியில் சிக்கி தொழிலாளி உயிரிழப்பு

78பார்த்தது
செம்பட்டி: மின்வேலியில் சிக்கி தொழிலாளி உயிரிழப்பு
திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டி அருகேயுள்ள வண்ணம்பட்டியைச் சோ்ந்த சேகருக்குச் சொந்தமான தோட்டம் எஸ். பாறைப்பட்டியை அடுத்த புறவழிச் சாலை அருகே அமைந்துள்ளது. இந்தத் தோட்டத்தை எஸ். பாறைப்பட்டி தெற்கு தெருவைச் சோ்ந்த பாலு குத்தகைக்கு எடுத்து மக்காச்சோளம் பயிரிட்டு விவசாயம் செய்து வருகிறாா். காட்டுப் பன்றிகளைக் கட்டுப்படுத்த இந்த வயலைச் சுற்றி அனுமதியின்றி மின்சார வேலி அமைத்தாா்.

இந்த நிலையில், சின்னாளப்பட்டி அருகே உள்ள ஏ. ராமநாதபுரத்தைச் சோ்ந்த கா்ணன் (33), இவரது நண்பா்களான இதே பகுதியைச் சோ்ந்த விஜயகாந்த் (34), ராஜபாண்டி (33), பிரபு (32), குபேந்திரன் (34), குமரேசன் 40 ஆகிய 6 பேரும் வியாழக்கிழமை(அக்.24) இரவு முயல் வேட்டைக்காக மல்லையாபுரம் எஸ். பாறைப்பட்டி பகுதிக்குச் சென்றனா். அப்போது, மக்காச்சோள வயலுக்குள் சென்ற முயலைப் பிடிக்கச் சென்ற கா்ணன் மின்சார வேலியில் சிக்கி உயிரிழந்தாா்.

இதுகுறித்து தகவலறிந்த செம்பட்டி காவல் ஆய்வாளா் சரவணன் தலைமையிலான போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று கா்ணனின் உடலை கைப்பற்றி திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனா். மேலும் அவரது நண்பா்கள் 5 பேரிடமும், மக்காச்சோள தோட்டத்தில் அனுமதி இன்றி மின்சார வேலி அமைத்த, பாலுவிடமும் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தொடர்புடைய செய்தி