மாநகராட்சி அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம்

54பார்த்தது
திண்டுக்கல் மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து இந்திய மஜ்லிஸ் கட்சி சார்பில் மாநகராட்சி அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திண்டுக்கல் மாநகராட்சியில் பணிபுரியும் துப்புரவு பணியாளர்களுக்கு வேலை நேரத்தை 8 மணி நேரமாக உறுதிப்படுத்த வேண்டும் கழிவுகளை தனித்தனியாக பிரிக்க சொல்லி கட்டாயப்படுத்த கூடாது. பே ஸ்லிப் வழங்க வேண்டும், கூடுதல் வேலை நேரத்திற்கு தனி சம்பளம் வழங்க வேண்டும்.

தூய்மை பணியாளர்களுக்கு அரசு வழங்கும் முழு ஊதியத் தொகை ஆயிரம் ரூபாய் முழுமையாக வழங்க வேண்டும். வேலை பணி சுமைகளை குறைக்க கூடுதல் பணியாளர்களை நியமிக்க வேண்டும். ஸ்பெஷல் ஒர்க் இருக்கு தனி சம்பளம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி புதன்கிழமை காலை 11 மணியளவில் மாநகராட்சி அலுவலகம் முன்பாக மஜ்லிஸ் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி