ஊட்டி, கொடைக்கானல் செல்ல இ-பாஸ் கட்டாயம்

21576பார்த்தது
ஊட்டி, கொடைக்கானல் செல்ல இ-பாஸ் கட்டாயம்
ஊட்டி, கொடைக்கானலில் குவியும் சுற்றுலாப் பயணிகள் கூட்டத்தை கட்டுப்படுத்த இ - பாஸ் வழங்கும் நடைமுறையை அமல்படுத்த வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் கூறியுள்ளது. மே 7 முதல் ஜூன் 30 வரை இ-பாஸ் நடைமுறையை அமல்படுத்த வேண்டும் என நீலகிரி, திண்டுக்கல் ஆட்சியர்களுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். இதற்கான தொழில்நுட்ப உதவிகளை தமிழ்நாடு அரசு செய்ய வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் உள்ளூர் மக்களுக்கு இதற்கு விலக்கு அளிக்க வேண்டும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி