ஓபிஎஸ் அணியினர் தங்கமணி முன்னிலையில் அதிமுகவில் ஐக்கியம்

75பார்த்தது
ஓபிஎஸ் அணியினர் தங்கமணி முன்னிலையில் அதிமுகவில் ஐக்கியம்
நாமக்கல்: கொல்லிமலை ஒன்றியம் வாழவந்திநாடு ஒன்றிய குழு உறுப்பினர் பாப்பாத்தி ராஜமாணிக்கம், முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அணியில் இருந்து வந்தார். இவர் தலைமையில் 50க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் அதிமுக மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான தங்கமணி முன்னிலையில் இணைந்தனர். அவர்களை தங்கமணி சால்வை அணிவித்து வரவேற்றார். நிகழ்ச்சியில் கொல்லிமலை ஒன்றிய அதிமுக செயலாளர் சந்திரன், இணை செயலாளர் ஜெகதீசன், பொதுக்குழு உறுப்பினர் சந்திரன் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் உடனிருந்தனர்.