மனைவியை அடித்துக் கொன்ற கணவன் கைது

47355பார்த்தது
மனைவியை அடித்துக் கொன்ற கணவன் கைது
புதுக்கோட்டை: கறம்பக்குடி அருகேயுள்ள வாணக்கன்காடு சேர்ந்தவர் மூக்கன். இவரது மனைவி ஜீவிதா. இவர்களுக்கு ஒரு மகன், இரு மகள்கள் உள்ளனர். இந்த நிலையில், தம்பதியினரிடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில், நேற்றும் இருவருக்குமிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், மூக்கன் கட்டையால் தாக்கியதில் ஜீவிதா பலத்த காயமடைந்தார். மயங்கிய நிலையில் சுருண்டு விழுந்த ஜீவிதாவை, அக்கம்பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே ஜீவிதா உயிரிழந்தார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் குற்றவாளியை கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி