கட்சிக்கு எதிராக கருத்து - காங்கிரஸிலிருந்து தலைவர் நீக்கம்

53பார்த்தது
கட்சிக்கு எதிராக கருத்து - காங்கிரஸிலிருந்து தலைவர் நீக்கம்
காங்கிரஸ் கட்சிக்கு எதிராக கருத்து தெரிவித்ததாக கூறி மகாராஷ்டிரா காங்கிரஸ் முன்னாள் தலைவர் சஞ்சய் நிருபம் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். மகாராஷ்டிராவில் ‘இண்டியா’ கூட்டணியில் அங்கம் வகிக்கும் சிவசேனா, 17 வேட்பாளர்களை தன்னிச்சையாக அறிவித்தது. அதுகுறித்து கருத்து தெரிவித்த சஞ்சய் நிருபம், “சிவசேனாவின் இந்த செயல் காங்கிரஸ் கட்சியை ஒழிக்கும் சதி” என்று விமர்சித்திருந்தார். உண்மையில் காங்கிரஸுக்கு ஆதரவாக பேசிய அவரை, காங்கிரஸ் கட்சிக்கு எதிராக கருத்து தெரிவித்தார் என்று கூறி, ஆறு ஆண்டுகள் நீக்கி தலைமை நடவடிக்கை எடுத்துள்ளது.

தொடர்புடைய செய்தி