தமிழ்நாட்டு அரசியலையும், தமிழ் சினிமாவையும் பிரிக்க முடியாது என்பது அனைவரும் அறிந்ததே..! இந்த மக்களவை தேர்தலிலும் திரை நட்சத்திரங்கள் கணிசமான அளவில் வேட்பாளர்களாக களமிறங்குகின்றனர். ராதிகா சரத்குமார், விஜய பிரபாகரன், விஜய் வசந்த், மன்சூர் அலிகான், தங்கர்பச்சான், மு.களஞ்சியம் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள் ஆவர். கருணாஸ், நமீதா, விந்தியா, இமான் அண்ணாச்சி, செந்தில், ரோகிணி ஆகியோர் பிரதான கட்சிகளுக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பில் மும்முரம் காட்டுகின்றனர்.