மாடுபிடி வீரர்களுக்கும் இன்சூரன்ஸ் திட்டம் - வேட்பாளர் அறிவிப்பு

52பார்த்தது
மாடுபிடி வீரர்களுக்கும் இன்சூரன்ஸ் திட்டம் - வேட்பாளர் அறிவிப்பு
ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் காளைகளுக்கும், மாடுபிடி வீரர்களுக்கும் இன்சூரன்ஸ் திட்டம் செயல்படுத்தப்படும் என மதுரை மக்களவை தொகுதி அதிமுக வேட்பாளர் டாக்டர் சரவணன் தெரிவித்துள்ளார். மதுரை மாநகரின் பல்வேறு பகுதிகளில் சரவணனுக்கு ஆதரவாக முன்னாள் அமைச்சர்கள், தொண்டர்கள் பரப்புரை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில், திறந்த வாகனத்தில் நேற்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட சரவணன், ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்கும் வீரர்களுக்கு இன்சூரன்ஸ் திட்டம் கொண்டு வரப்படும் என வாக்குறுதி அளித்தார்.

இந்த தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் சிபிஎம் கட்சியின் சு.வெங்கடேசன் எம்.பி, பாஜக சார்பில் ராமஸ்ரீனிவாசன், நாம் தமிழர் கட்சி சார்பில் சத்யாதேவி ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

தொடர்புடைய செய்தி