பள்ளி வாகனங்களுக்கு புதிய கட்டுபாடு - கல்வித்துறை

64பார்த்தது
பள்ளி வாகனங்களுக்கு புதிய கட்டுபாடு - கல்வித்துறை
பள்ளி வாகனங்களில் பெண் குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் பாலியல் குற்றங்களை தடுப்பதற்காக பள்ளி கல்வித்துறை புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி “பள்ளி வாகனங்களில் இனி ஒரு பெண் உதவியாளர் கட்டாயம் இருக்க வேண்டும்” என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் 10 ஆண்டுகள் அனுபவம் வாய்ந்த கனரக ஓட்டுனர்களை மட்டுமே நியமிக்க வேண்டும். பள்ளி வாகனகங்கள், ஓட்டுநர், உதவியாளர் குறித்த விபரங்களை பள்ளி தகவல் மேலாண்மை இணையதளத்தில் நாளை மாலைக்குள் பதிவேற்றம் செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது.