பென்னாகரம் - Pennagaram

சிறுமியை கர்ப்பமாக்கிய நபர், போக்சோ வழக்கில் கைது

சிறுமியை கர்ப்பமாக்கிய நபர், போக்சோ வழக்கில் கைது

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமி அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த 14-ந் தேதி சிறுமி தனக்கு வயிற்று வலி இருப்பதாக தனது தாயாரிடம் தெரிவித்தார். அதன் பேரில் தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்று பரிசோதனை மேற்கொண்டனர். அப்போது சிறுமி 7 மாதம் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து குழந்தைகள் பாதுகாப்பு மையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் குழந்தை பாதுகாப்பு அலுவலர்கள் சிறுமியிடம் விசாரணை நடத்தினர். அப்போது சிறுமியை தேன்கனிக்கோட்டையை சேர்ந்த அவரது அத்தை கணவர் மகாதேவன் என்பவர் ஆசை வார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்ததும், அதில் சிறுமி கர்ப்பம் அடைந்தது தெரிய வந்தது. இது தொடர்பாக சிறுமியின் தாயார் பென்னாகரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் (செப். 21) நேற்று புகார் செய்தார். அதன் பேரில் மகாதேவன் மீது காவலர்கள் போக்சோ வழக்குப்பதிவு செய்து மகாதேவனை நேற்று மாலை காவலர்கள் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வீடியோஸ்


தர்மபுரி