தர்மபுரி: பூண்டு விலை சரிவு.. பொதுமக்கள் மகிழ்ச்சி

50பார்த்தது
தர்மபுரி மாவட்டம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த ஆறு மாதங்களுக்கும் மேலாக வட மாநிலங்களில் இருந்தும் திண்டுக்கல் கொடைக்கானல் தேனி உள்ளிட்ட மலைப்பகுதிகளில் இருந்து பூண்டு வரத்து சரிந்து காணப்பட்டதால் விலை கிடு கிடுவென உயர்ந்து உழவர் சந்தைகளில் ஒரு கிலோ 400 ரூபாய் வரையிலும் வெளி மார்கெட்டுகளில் ஒரு கிலோ பூண்டு 450 ரூபாய் வரையிலும் விற்பனையானதால் பொது மக்கள் சுற்று கலக்கமடைந்த , நிலையில் சமீப நாட்களாக வட மாநிலங்களில் இருந்து பூண்டு வரத்தை தற்போது அதிகரித்துள்ளது இதனால் பூண்டு விலை கணிசமான அளவு குறைந்து இன்று பிப்ரவரி 19 காலை நிலவரப்படி உழவர் சந்தையில் ஒரு கிலோ பூண்டு 160 விற்பனை செய்யப்படுகிறது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி