தர்மபுரி: சிவராத்திரியை முன்னிட்டு பக்தர்கள் பால்குட ஊர்வலம்

76பார்த்தது
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பாப்பாரப்பட்டி அருகே அமைந்துள்ள புகழ்பெற்ற காளியம்மன் கோவிலில் மகா சிவராத்திரியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. நேற்று இரவு தொடங்கி இன்று பிப்ரவரி 25 அதிகாலை வரை சிறப்பு வழிபாடுகள் மற்றும் பூஜைகள் நடைபெற்றது இதனை அடுத்து இன்று காலை 11: 30 மணியளவில் பக்தர்கள் பால்குடம் ஊர்வலமாக கொண்டு வந்தனர் இதனை அடுத்து மேல தாளங்கள் முழங்க முளைப்பாரி ஊர்வலமும் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். மகா சிவராத்திரி சிறப்பு பூஜையை முன்னிட்டு பக்தர்கள் பால்குடம் எடுத்துச் சென்று பக்தியுடன் வழிபாடுகளில் ஈடுபட்டனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி