தர்மபுரி: நல்லம்பள்ளியில் ஆடுகள் விற்பனை அமோகம்

50பார்த்தது
தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளியில் செவ்வாய்க்கிழமை நாட்களில் ஆடுகள் விற்பனைக்காக பிரத்தியேகமாக மாவட்ட அளவில் பிரசித்தி பெற்ற வாரச்சந்தை நடைபெறுகிறது. நேற்று பிப்ரவரி 25 காலை கூடிய சந்தையில்  மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சேலம் கிருஷ்ணகிரி திருப்பத்தூர் திருவண்ணாமலை உள்ளிட்ட வெளி மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான விவசாயிகள் & வியாபாரிகள் விற்க மற்றும் வாங்க வந்திருந்தனர் ஆடுகள் ரகம் & அளவை பொறுத்து 3500  ரூபாய்க்கு துவங்கி 22, 000  ரூபாய் வரை என 43 லட்சத்திற்கு ஆடுகள் வர்த்தகம் நடைபெற்றதாகவும், மேலும் இந்த வாரம் ஆடுகளுக்கு நல்ல விலை கிடைத்துள்ளதால் அடுத்த வாரம் மேலும் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி