மலையபுரம் சிங்காரவேலு, தமிழ்நாடு பொதுவுடமை கொள்கையாளர், இவர் இந்திய விடுதலை போராட்டக்காரர் மற்றும் தமிழ்நாட்டில் ஆற்றிய பணிகளுக்காக இவர் சிந்தனை சிற்பி என்றும் போற்றப்படுகின்றார்.
இன்று (பிப்ரவரி 18) இவரது 165வது பிறந்த நாளை முன்னிட்டு தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் பகுதியில் பிற்பகல் 3 மணி, சிங்காரவேலரின் புகைப்படம் அடங்கிய பதாகை வைத்து தமிழக வெற்றிக் கழகத்தின் தர்மபுரி மேற்கு மாவட்ட செயலாளர் தாபா தலைமையில் தமிழக வெற்றிக் கழக தொகுதி பொறுப்பாளர்கள் மற்றும் மாவட்ட அளவிலான நிர்வாகிகள் உறுப்பினர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர். பின்பு அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டன.