தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஏரியூர் பகுதியில் பெரும்பாலை காவலர்கள் இன்று வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர் அப்போது அப்பகுதியில் சொகுசு கார் ஒன்று வேகமாக வந்தது காவலர்கள் சோதனை செய்ய நிறுத்திய போது கார் நிற்க்காமல் வேகமாக சென்றதை எடுத்து காரை பின் தொடர்ந்து காவலர்கள் விரைந்து சென்றனர் பாதி வழியில் காரை நிறுத்திவிட்டு ஓட்டுனர் தப்பி ஓடினார். காவலர்கள் சொகுசு காரை சோதனை செய்ததில் அதில் தமிழக அரசால் தடைவிதிக்கப்பட்டு இருந்த 50 மூட்டைகளில் குட்கா போதைப்பொருள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது இதனை அடுத்து சொகுசு கார் மற்றும் போதைப்பொருளை பெரும்பாலை காவலர்கள் பறிமுதல் செய்தனர் மேலும் போதை பொருள் எங்கிருந்து கடத்திவரப்பட்டது என்றும் வாகனத்தை ஓட்டிய நபர் யார் என்பது குறித்தும் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.