கோவை கே எம் சி மருத்துவமனை சார்பில் தர்மபுரியில் இரப்பை குடல் மற்றும் கல்லீரல் சிகிச்சைகள் பற்றிய கருத்தரங்கு கூட்டம் சோகத்தூரில் இன்று நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீன் டாக்டர் அமுதவள்ளி அவர்கள் கலந்து கொண்டு குத்துவிளக்கு ஏற்றி வைத்து கருத்தரங்கத்தை துவக்கி வைத்தார். இதில் கே எம் சி தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் டாக்டர் பழனிசாமி செய்தியாளர் சந்திப்பின் போது கருத்தரங்கில் இத்துறையில் ஏற்பட்டுள்ள சமீபத்திய முன்னேற்றங்கள் மற்றும் சிறந்த நடைமுறைகள் குறித்து விளக்கப்பட்டது.
மேலும் கல்லீரல் பாதிப்பு ஏற்பட்டால் எந்தெந்த வகையில் அறிகுறிகள் தென்படும் அதனுடைய பாதிப்புகள் மற்றும் கல்லீரல் பாதிப்பு ஏற்படாமல் இருக்க எவ்வாறு உணவு முறை உட்கொள்வது உடற்பயிற்சி செய்வது உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை எடுத்துரைத்தார் இந்த கருத்தரங்கில் மருத்துவர்கள் மற்றும் அறுவை சிகிச்சை நிபுணர்கள் கலந்து கொண்டு சிறப்பு சிகிச்சை சேவைகளை வழங்குவதில் உள்ள நடைமுறைச் சவால்கள் மற்றும் மருத்துவ சேவைகளை மேம்படுத்துவது குறித்து விவாதித்தனர் மேலும் இத்துறையில் ஏற்பட்டுள்ள சமீபத்திய முன்னேற்றங்கள் மற்றும் சிறந்த நடைமுறைகள் குறித்து விவாதிக்கப்பட்டது இதில் கைதேர்ந்த புகழ்பெற்ற நிபுணர்கள் தங்கள் அனுபவத்தை பகிர்ந்து கொண்டனர்.