தர்மபுரி மாவட்ட அ. தி. மு. க. நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் இன்று தர்மபுரியில் உள்ள கட்சி அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட அவைத் தலைவர் நாகராஜன் தலைமை தாங்கினார். நகர செயலாளர் பூக்கடை ரவி வரவேற்றார். மாநில விவசாய பிரிவு தலைவர் டி. ஆர். அன்பழகன், மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் எஸ். ஆர். வெற்றிவேல், எம். எல். ஏக்கள் கோவிந்தசாமி, சம்பத்குமார், கூட்டுறவு ஒன்றிய முன்னாள் தலைவர் பொன்னுவேல் மற்றும் கட்சி நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் முன்னாள் அமைச்சரும், கட்சியின் மாவட்ட செயலாளருமான கே. பி. அன்பழகன் எம். எல். ஏ. கலந்துகொண்டு தீர்மானங்கள் குறித்து விளக்கிப் பேசினார்.
தமிழக முன்னாள் முதல் -அமைச்சர் ஜெயலலிதாவின் 77-வது பிறந்தநாள் விழாவை தர்மபுரி மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் அவரது உருவ சிலை மற்றும் படங்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, கட்சியின் கொடி ஏற்றி நலத்திட்ட உதவிகள் வழங்கி சிறப்பாக கொண்டாடுவது, வருகிற சட்டமன்ற பொது தேர்தலை முன்னிட்டு மாவட்டத்தில் உள்ள 5 சட்டமன்றத் தொகுதிகளிலும் கட்சியின் நிர்வாகிகள் தீவிரமாக பணியாற்றுவது என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.