தர்மபுரி மின் கோட்டம் பென்னாகரம் துணை மின் நிலையத்தில் நாளை பிப்ரவரி 15 சனிக்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதினால் துணை மின் நிலையத்தின் கீழ் மின்சாரம் வழங்கப்பட்டு வரும் பகுதிகளான பென்னாகரம், ஒகேனக்கல், ஏரியூர், பெரும்பாலை, நாகமரை, சின்னம்பள்ளி, பாப்பாரப்பட்டி, கொல்லப்பட்டி, தோமனஅள்ளி, திகிலோடு, பி. அக்ரஹாரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் நிறுத்தம் அமலில் இருக்கும் என செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.