தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி வட்டத்துக்கு உட்பட்ட, தடங்கம் பஞ்சாயத்து அரசுகலைக் கல்லூரி தர்மபுரியில் நேற்று பிப்ரவரி 22 மாலை உலக தாய்மொழி தினத்தை முன்னிட்டு உறுதிமொழி எடுக்கப்பட்டது. மேலும் இந்த உறுதிமொழியின் போது உலகின் தொன்மையான நமது தாய் மொழியாம் தமிழ் மொழியின் பெருமைகளையும் சிறப்புகளையும் எடுத்துக்கூறி கல்லூரி முதல்வர். முனைவர் கோ. கண்ணன் தலைமை தாங்கினார். உடன் நாட்டுப்புற நாட்டு நலப்பணி திட்ட மாணவர்கள் கலந்து கொண்டு நாட்டு நலப்பணி அலுவலர்கள் முன்னிலையில் உறுதி மொழியை எடுத்துக் கொண்டனர். இந்த நிகழ்வில் கல்லூரி மாணவ மாணவிகள் மற்றும் இருபால் பேராசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.