தீபாவளி பண்டிகையை ஒட்டி, பேக்கரிகளில் விற்கப்படும் உணவு பொருட்களின் தரத்தை உறுதி செய்ய உணவு பாதுகாப்புத்துறை உத்தரவிட்டுள்ளது. உணவு பாதுகாப்பு துறையின் அறிவுறுத்தல்களை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்றும், தயாரிக்கப்படும் உணவுப் பொருட்களில் காலாவதி தேதி மற்றும் தயாரிக்கப்படும் இடம் குறித்த தகவல் இடம்பெற வேண்டும் என கூறப்பட்டுள்ளது. மீறினால் அபராதம் உள்ளிட்ட கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என எச்சரித்துள்ளது.