திட்டக்குடி - Thittakudi

ஓ. கீரனூர்: தாய் கண்டித்ததால் மகன் தற்கொலை

ஓ. கீரனூர்: தாய் கண்டித்ததால் மகன் தற்கொலை

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த பெண்ணாடம் அடுத்த ஓ. கீரனூர் இந்திரா நகரைச் சேர்ந்த சுப்ரமணியன் மகன் சுரேஷ் கேரளா மாநிலத்தில் பிளம்பராக வேலை பார்த்தவர் தீபாவளிக்கு சொந்த ஊர் வந்தார். நேற்று முன்தினம் சுரேஷின் தாய் வேலைக்கு ஏன் செல்லவில்லை என கேட்டார். இதனால் மனமுடைந்த சுரேஷ் அரளி விதை சாப்பிட்டு மயங்கி விழுந்தார். பின்னர் அவரை மீட்டு அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்‌. இது குறித்து பெண்ணாடம் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வீடியோஸ்


హైదరాబాద్