அண்ணா பிறந்தநாள்விழா அமைச்சர் கணேசன் மாலை அணிவித்து மரியாதை

53பார்த்தது
பேரறிஞர் அண்ணா 166வது பிறந்தநாளை முன்னிட்டு கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த வதிஸ்டபுரத்தில் உள்ள அண்ணாவின் திருஉருவ சிலைக்கு தமிழக தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு நலத்துறை அமைச்சர் சி வெ கணேசன் மாலை அணிவித்து அங்கிருந்து பழைய பேரூராட்சி அலுவலம் வரை ஊர்வலமாக வந்தார்.

உடன் திட்டக்குடி நகர செயலாளர் வி. பி. பி. பரமகுரு, நகர் மன்ற தலைவர் வெண்ணிலா கோதண்டம், ஒன்றிய செயலாளர் பட்டூர் அமிர்தலிங்கம், திமுக மாவட்ட அயலக அணி அமைப்பாளர் சேதுராமன் மற்றும் கழக நிர்வாகிகள் நூற்றுக்கும் மேற்ப்பட்டோர் கலந்துக்கொண்டனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி