பாசார்-காஞ்சிராங்குளம் பகுதியில் தார்சாலை அமைப்பு

85பார்த்தது
கடலூர் மாவட்டம் திட்டக்குடி வட்டம் மங்களூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட பாசார்-காஞ்சிராங்குளம் செல்லும் தார் சாலை உள்ளது. இந்த சாலை பல மாதங்களாகச் சேதம் அடைந்து போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் காணப்பட்டது.

சேதமடைந்த சாலையைச் சீரமைத்து பொதுமக்கள் பயன்பட்டுக் கொண்டு வர வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்து வந்தனர். அதன் பேரில் சாலைகள் புதுப்பிக்கும் பணி தொடங்கப்பட்டு புதிய சாலை அமைக்கப்பட்டுள்ளது.

புதிய சாலை அமைக்கப்பட்டதால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கால்நடை வாசிகள் என அனைவரும் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி