கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்த ரெட்டை குறிச்சி கிராமத்தில் குடிநீர் வழங்காத நிர்வாகத்தை கண்டித்து ஊராட்சி மன்ற தலைவரின் வீட்டை முற்றுகையிட்டு அப்பகுதி மக்கள் காலி குடங்களுடன் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். குடிநீர் வேண்டி பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என பொதுமக்கள் புகார் தெரிவித்த நிலையில் அதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்த நிலையில் போராட்டம் கைவிடப்பட்டது. இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழ்நிலை நிலவியது.