கடலூர் மாவட்டம் திட்டக்குடி வட்டம் பாசிக்குளம் காலனியை சோ்ந்தவரை போதைப் பொருள் வழக்கில் கருவேப்பிலங்குறிச்சி காவல் துறையினர் கடந்த ஆகஸ்ட் 8 ஆம் தேதி கைது செய்தனா். தொடா்ந்து அவருக்கு ஆகஸ்ட் 20 ஆம் தேதி உடல் நலம் சரியில்லாமல் போனதால் கடலூா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தாா்.
இந்தச் சம்பவத்தில் போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்படாத நிலையில் அவா் மீது பொய்வழக்குப் பதிவு செய்த உதவி ஆய்வாளா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அவரது மரணம் குறித்து சிபிசிஐடி காவல் துறையினர் விசாரணை நடத்த வேண்டும். உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு ரூபாய் 25 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும். அவரது மனைவிக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிஸ்ட் கட்சியினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.