கடலூர் மாவட்டம் வேப்பூர் கூட்ரோடு, ஆடலரசன் நகர், பேருந்து நிலையம், அண்ணாநகர் உள்ளிட்ட பகுதிகளில் குப்பைகள் குவிந்து கிடப்பதால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதோடு நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளதாக கிராமத்தினர் புகார் தெரிவிக்கின்றனர். இதனை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.