செயற்கை நுண்ணறிவு கருவியான க்ரோக் (Grok) மூலம் உருவாக்கித் தரும் தகவல்களுக்கு சமூக ஊடக தளமான எக்ஸ் (X) தான் பொறுப்பு என மத்திய அரசு முடிவு செய்துள்ளது. மேலும் இது தொடர்பான சட்டப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்று அரசாங்க வட்டாரம் தெரிவித்துள்ளது. சமீபத்தில், எகஸ்-ல் உள்ள பயனர்கள் Grok இலிருந்து இந்திய அரசியல்வாதிகளைப் பற்றி பல்வேறு கேள்விகளைக் கேட்கிறார்கள். அதற்கு AI இயங்குதளம் பல்வேறு சர்ச்சைக்குறிய பதில்களை வழங்கி வருகிறது. இந்த விவகாரம் மத்திய அரசின் கவனத்திற்கு வந்துள்ளது.