சங்கரன்கோவில் மூவர் கொலை வழக்கில் குற்றவாளிகளின் மரண தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. கடந்த 2014ம் ஆண்டு பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த மூவர் கொலை செய்யப்பட்ட வழக்கில், குற்றவாளிகள் நால்வருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை, ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. மேலும், விசாரணை நீதிமன்றத்தால் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட 7 பேரில், நால்வரின் ஆயுள் தண்டனையையும் ரத்து செய்து உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.