சென்னை மெட்ரோ ரயில் 2 ஆம் கட்ட திட்டத்தில் இயக்கப்பட உள்ள ஓட்டுநரில்லா மெட்ரோ ரயிலின் முதல் சோதனை ஓட்டம் நடைபெற்றது. 2ஆம் கட்ட திட்டத்தில் பூந்தமல்லி முதல் கலங்கரை விளக்கம் வரையிலான 4 வது வழித்தடத்தில் ஒரு பகுதியில் சோதனை நடந்தது. பூந்தமல்லி பணிமனையில் இருந்து முல்லைத் தோட்டம் வரை 3 கி.மீ., தூரம் 25 கி.மீ வேகத்தில் ஓட்டுநர் இல்லா மெட்ரோ ரயிலை இயக்கப்பட்டது. நேற்று மாலை 5 மணிக்கு நடைபெற இருந்த சோதனை ஓட்டத்தின்போது மின் கேபிள்களில் தீப்பொறி ஏற்பட்டதால் ஒத்திவைக்கப்பட்டது.