மனைவி சுய இன்பத்தில் ஈடுபடுவது திருமணத்தை முறித்துக்கொள்ள ஒரு காரணமாக இருக்க முடியாது என உயர் நீதிமன்ற மதுரைக்கிளை கூறியுள்ளது. கரூரை சேர்ந்த நபர் ஒருவர் விகாரத்துக் கோரி உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், தனது மனைவி ஆபாசப் படங்கள் பார்ப்பவர், அடிக்கடி சுயஇன்பத்தில் ஈடுபடுவார் என்று குற்றம்சாட்டியுள்ளார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன் மற்றும் ஆர்.பூர்ணிமா ஆகியோர் அடங்கிய அமர்வு வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.