சென்னை போரூர் - பூந்தமல்லி இடையே 2.5 கி.மீ தூரத்திற்கு ஓட்டுநர் இல்லாத தானியங்கி மெட்ரோ ரயில் சோதனை ஓட்டத்தில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இன்று (மார்ச்.20) மாலை சோதனை ஓட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், மின் கம்பிகள் அறுந்து விழுந்ததால் சோதனை ஓட்டம் நடப்பதில் சிக்கல் எனக் கூறப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, தொழில்நுட்ப கோளாறு சரிசெய்யப்பட்டு அடுத்த 3 மணி நேரத்திற்குள் சோதனை ஓட்டம் நடத்தப்படும் என மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.