கடலூர் மாவட்டத்தில் தோல் தொழிற்சாலையை எதிர்த்து போராடிய விவசாயிகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். தோல் தொழிற்சாலைக்காக விவசாய நிலங்களை கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தப்பட்டது. முந்திரி மரங்கள் பிடுங்கி எறியப்பட்ட நிலையில் அதே இடத்தில் முந்திரி நடும் போராட்டம் நடத்தினர். இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் சண்முகம் உள்ளிட்ட விவசாயிகளை போலீசார் குண்டுக்கட்டாக கைது செய்தனர்.