புவனகிரி - Bhuvanagiri

பரங்கிப்பேட்டை: தானாக ஓடிய அரசு பேருந்து

பரங்கிப்பேட்டை: தானாக ஓடிய அரசு பேருந்து

கடலூர் முதுநகரில் இருந்து பரங்கிப்பேட்டைக்கு நேற்று மாலை பயணிகளுடன் அரசு டவுன் பேருந்து வந்தது. பேருந்தை டிரைவர் சபாபதி என்பவர் ஓட்டி வந்தார். பேருந்தை பரங்கிப்பேட்டை சஞ்சிவிராயர் கோவில் தெரு பேருந்து நிறுத்தத்தில் பயணிகளை இறக்கிவிட்டு அரசு மருத்துவமனை முன் டிரைவர் நிறுத்தினார். அருகில் உள்ள கடைக்கு டீ குடிப்பதற்காக, டிரைவர் மற்றும் கண்டக்டர் சென்றனர். சற்று நேரத்தில் கியரில் நிறுத்திருந்த பேருந்து திடீரென தானாக ஓடி எதிரே இருந்த காம்ளக்சில் இருந்த பூக்கடை மீது மோதி நின்றது. பேருந்து தானாக வருவதை பார்த்ததும் அப்பகுதியில் நின்றிருந்தவர்கள் அலறியடித்து ஓடினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது. விபத்தில் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. பேருந்தின் முன் பக்க கண்ணாடி மற்றும் பூக்கடை முழுவதும் சேதமடைந்தது. இது குறித்து பரங்கிப்பேட்டை காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். இச்சம்பவம் பரங்கிப்பேட்டையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

வீடியோஸ்


హైదరాబాద్