கோவை: பெட்ரோல் பங் காசாளர் அடித்துக்-கொலை இருவர் கைது!

69பார்த்தது
கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி அருகே பெட்ரோல் பங்க் ஊழியர் ஒருவர் லாரி ஓட்டுநர்களால் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் புதுக்குடியை சேர்ந்த காளிமுத்து (47) என்பவர் கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி அருகே உள்ள ராயர்பாளையத்தில் தங்கியிருந்து கிட்டம்பாளையம் பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க்கில் காசாளராக வேலை பார்த்து வந்தார். நேற்று முன்தினம் இரவு 9. 30 மணியளவில் தூத்துக்குடியில் இருந்து லாரி ஒன்று அந்த பெட்ரோல் பங்க் அருகே வந்தபோது, லாரியை நிறுத்துவதில் காளிமுத்துவுக்கும், லாரி ஓட்டுநர்களான மாரிமுத்து (33) மற்றும் சரவணகுமார் (26) ஆகியோருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
பின்னர், இரவு 12 மணியளவில் மீண்டும் பெட்ரோல் பங்க்கிற்கு வந்த லாரி ஓட்டுநர்கள், தூங்கிக் கொண்டிருந்த காளிமுத்துவை இரும்புக் கம்பியால் தாக்கி கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றனர். இதுகுறித்து கருமத்தம்பட்டி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு, தப்பி ஓடிய மாரிமுத்து மற்றும் சரவணகுமார் ஆகிய இருவரையும் நேற்று கைது செய்தனர். கைது செய்யப்பட்ட இருவரும் தரைப்பாலத்தில் இருந்து குதித்ததில் காலில் முறிவு ஏற்பட்டு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி