கோவை: பேக்ஹோ லேடர் சூப்பர்ஸ்மார்ட் அறிமுகம்!

70பார்த்தது
கட்டுமான உபகரணங்கள் தயாரிப்பில் முன்னோடியாகத் திகழும் புல் நிறுவனம், அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய பேக்ஹோ லேடர் சூப்பர்ஸ்மார்ட் இயந்திரத்தை நேற்று அறிமுகப்படுத்தியது. சூலூர் காங்கயம்பாளையத்தில் நடைபெற்ற பிரம்மாண்ட அறிமுக விழாவில், GRD அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் திரு. டி. வித்யாபிரகாஷ் ரிப்பன் வெட்டி இந்த நவீன இயந்திரத்தை அறிமுகம் செய்து வைத்தார்.
புல் நிறுவனத்தின் இந்த புதிய இயந்திரம், ஆபரேட்டர்கள் எளிதாக இயக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. சமீபத்திய BS5-CEV சுற்றுச்சூழல் தர விதிமுறைகளுக்கு இணங்க, இதன் செயல்திறன் மேம்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் கிடைக்கும் மூலப்பொருட்களைக் கொண்டே இந்த இயந்திரம் தயாரிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த சூப்பர்ஸ்மார்ட் மாடல், அதிநவீன தொழில்நுட்பம், நிரூபிக்கப்பட்ட நம்பகத்தன்மை மற்றும் புதுமையான அம்சங்களை உள்ளடக்கியது. இதன் மூலம், வேலைகளின் தேவைக்கு ஏற்ப செயல்திறனை மாற்றியமைக்க முடியும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி