சூலூர்: தண்ணீர் லாரி கவிழ்ந்து விபத்து; ஓட்டுநர் காயம்

60பார்த்தது
சூலூர்: தண்ணீர் லாரி கவிழ்ந்து விபத்து; ஓட்டுநர் காயம்
பல்லடம் அய்யம்பாளையத்தில் இருந்து தண்ணீர் லோடுடன் சுல்தான்பேட்டை நோக்கி வந்த டேங்கர் லாரி, நேற்று செஞ்சேரி மலை அருகே கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. திருச்சியைச் சேர்ந்த வீரமணி கண்டன் (34) என்பவர் லாரியை ஓட்டிச் சென்றார். 

செஞ்சேரி மலை வளைவில் திரும்பும்போது, எதிர்பாராதவிதமாக லாரி கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் இருந்த மூன்று தென்னை மரங்கள் மற்றும் மின் கம்பத்தில் மோதி கவிழ்ந்தது. இந்த விபத்தில் ஓட்டுநர் வீரமணி கண்டன் காயமடைந்தார். 

உடனடியாக அவரை மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து சுல்தான்பேட்டை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி