கோவை: பெண் கலைஞரின் வண்ண நூல் ஓவியம்

56பார்த்தது
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ், சர்வதேச விண்வெளி நிலையத்தில் 286 நாட்கள் தங்கியிருந்து வெற்றிகரமாக பூமிக்குத் திரும்பியுள்ளார். அவரது சாதனையை போற்றும் வகையில், கோயம்புத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த ரேவதி சௌந்தர்ராஜன் என்ற கலைஞர், வண்ண நூலில் சுனிதா வில்லியம்ஸின் உருவப்படத்தை வரைந்துள்ளார். 

கரூர் நல்லூர் வயல் பகுதியைச் சேர்ந்த ரேவதி சௌந்தர்ராஜன், ஒரு தனியார் பள்ளி விடுதியில் கண்காணிப்பாளராக பணிபுரிந்து வருகிறார். சுற்றுச்சூழல் மாசு ஏற்படுத்தாத வகையில், மரம், காய்கறிகள், தானியங்கள் போன்ற இயற்கை பொருட்களைக் கொண்டு ஓவியங்கள் வரைவதில் ஆர்வம் கொண்டவர். 

சுனிதா வில்லியம்ஸின் விண்வெளி சாதனையை அங்கீகரிக்கும் விதமாக, 15 மணி நேரத்தில் இரண்டு அடிக்கு இரண்டு அடி வண்ண நூலில் அவரது உருவப்படத்தை வரைந்துள்ளார். ரேவதி சௌந்தர்ராஜனின் இந்த கலைத்திறன், சுனிதா வில்லியம்ஸின் சாதனையை போற்றுவதோடு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வையும் ஏற்படுத்துகிறது. அவரது இந்த முயற்சி, சமூக வலைதளங்களில் பலரது கவனத்தையும் பாராட்டுகளையும் பெற்றுள்ளது.

தொடர்புடைய செய்தி