கோவை: ரம்ஜான் தொழுகை - தவெக நிர்வாகிகள் பங்கேற்பு!

55பார்த்தது
கோவையில், சூலூர் ராவுத்தர் பகுதியில் திப்பு சுல்தான் காலத்தில் கட்டப்பட்ட பழமை வாய்ந்த பள்ளிவாசலில் இன்று சிறப்பு ரம்ஜான் தொழுகை நடைபெற்றது. இந்த சிறப்பு தொழுகையில் கோவை புறநகர் கிழக்கு மாவட்ட தமிழக வெற்றிக் கழக செயலாளர் பாபு கலந்து கொண்டார். தொழுகை முடிந்ததும், ரம்ஜான் பண்டிகையை கொண்டாடும் இஸ்லாமிய மக்களுக்கு இனிப்புகள் மற்றும் குளிர்பானங்கள் வழங்கி தனது ரம்ஜான் வாழ்த்துகளை அவர் தெரிவித்தார்.
இதுகுறித்து தர்கா தலைவர்கள் கூறுகையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் அவர்களின் சார்பாக கட்சியின் நிர்வாகிகள் இன்று தொழுகையில் கலந்து கொண்டது எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. கோவை முஸ்லிம்கள் சார்பில் எங்களது வாழ்த்துக்களையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறோம் என்றனர்.
மாவட்ட செயலாளர் பாபு இதுகுறித்து பேசுகையில், எங்கள் தலைவர் விஜய் அவர்களின் வழிகாட்டுதலின்படி, கோவை மாநகரில் நடைபெற்ற ரம்ஜான் தொழுகையில் பாவக்கா நிர்வாகிகள் கலந்து கொண்டு இஸ்லாமிய சகோதரர்களுக்கு ரம்ஜான் வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டதுடன், அவர்களுக்கு இனிப்புகளையும் வழங்கினோம் என்று தெரிவித்தார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி