கோவை: காட்டு யானை அட்டகாசம் - குரைத்த நாயை விரட்டிய யானை!

69பார்த்தது
கோவை, மருதமலை வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றைக் காட்டு யானை இரவு நேரங்களில் குடியிருப்பு பகுதிகளில் உணவு தேடி உலா வருகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு வடவள்ளி, நவாவூர் பகுதியில் குடியிருப்பு அருகே யானை உலா வந்தபோது, அந்த பகுதியில் இருந்த நாய் ஒன்று யானையைப் பார்த்து குரைத்தது. இதனால் கோபமடைந்த யானை நாயை விரட்டியது.
அப்போது அந்த வழியாக கார் ஒன்று வந்ததால் யானை மீண்டும் வனப்பகுதிக்குள் சென்றது. இந்த காட்சிகள் அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி