கிணத்துக்கடவு - Kinathukadavu

கோவை: ஆன்லைன் டிரேடிங்கில் ஊழியரிடம் ரூ. 77 லட்சம் மோசடி

கோவை: ஆன்லைன் டிரேடிங்கில் ஊழியரிடம் ரூ. 77 லட்சம் மோசடி

கோவை செல்வபுரத்தை சேர்ந்தவர் வினோத் (50). பி்காம் பட்டதாரியான இவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் வினோத் ஆன்லைன் டிரேடிங் மூலம் தொழில் செய்து லாபம் பெற முடிவு செய்தார். இதற்காக பிரபல செயலியில் விண்ணப்பம் செய்தார். அப்போது வினோத்தின் செல்போனில் தொடர்பு கொண்டு பேசிய நபர், ஆன்லைன் டிரேடிங் செய்தால் அதிக லாபம் கிடைக்கும் எனக் கூறி பணம் முதலீடு செய்யும் படி கூறியுள்ளார். இதனை நம்பி கடந்த செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் 12 தவணைகளாக மர்ம நபர் கூறிய வங்கி கணக்கில் ரூ. 77. 40 லட்சத்தை வினோத் அனுப்பியுள்ளார்.   அப்போது அதில் லாபம் வருவது போல் அவர்கள் காட்டி உள்ளனர். ஆனால் அந்த பணத்தை வினோத் எடுக்க முயன்ற போது மேலும் பணம் கட்டினால் தான் எடுக்க முடியும் என்று கூறியுள்ளனர். இதனால் ஏமாற்றம் அடைந்த வினோத் இது குறித்து விசாரித்த போது, பிரபல செயலியின் பெயரில் போலியான செயலி உருவாக்கி தன்னிடம் மோசடி செய்யப்பட்டது தெரியவந்தது. இதுகுறித்து வினோத் கோவை மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்ததார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வீடியோஸ்


మహబూబ్‌నగర్ జిల్లా