விருகம்பாக்கம் - Virugampakkam

சென்னை: கார்த்திகை மாதம் தொடக்கம்; பூக்கள் விலை உயர்வு

சென்னை: கார்த்திகை மாதம் தொடக்கம்; பூக்கள் விலை உயர்வு

கார்த்திகை மாதம் 1 இன்று (நவம்பர் 16) பிறப்பதை முன்னிட்டு, கோயம்பேடு மார்க்கெட்டில் அனைத்து பூக்களின் விலையும் மேலும் உயர்ந்தது. குறிப்பாக, ஒரு கிலோ மல்லி ரூ.900ல் இருந்து ரூ.1, 200க்கும், ஐஸ் மல்லி ரூ.800ல் இருந்து ரூ.1000க்கும், ஜாதி மல்லி மற்றும் முல்லை ரூ.600ல் இருந்து ரூ.750க்கும், கனகாம்பரம் ரூ.1, 200ல் இருந்து ரூ.1500க்கும், அரளி பூ ரூ.200ல் இருந்து ரூ.250க்கும், சாமந்தி ரூ.140ல் இருந்து ரூ.150க்கும், சம்பங்கி ரூ.120ல் இருந்து ரூ.160க்கும், பன்னீர் ரோஸ் ரூ.100ல் இருந்து ரூ.120க்கும், சாக்லேட் ரோஸ்ரூ.150க்கும் விற்பனை செய்யப்பட்டது.  இதுகுறித்து கோயம்பேடு பூ மார்க்கெட் துணை தலைவர் முத்துராஜ் கூறுகையில், ‘‘இன்று  (நவம்பர் 16) கார்த்திகை 1 என்பதால் அனைத்து பூக்களின் விலை மேலும் உயர்ந்துள்ளது. அனைத்து பூக்களும் விறுவிறுப்பாக வியாபாரம் செய்யப்பட்டுள்ளதால் விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர், ’’ என்றார்.

வீடியோஸ்


சென்னை