கட்சி மறுசீரமைப்புக்கு ஒத்துழைப்பு தர வேண்டும்: திருமாவளவன்

85பார்த்தது
கட்சியின் மறுசீரமைப்பையொட்டி நடைபெறும் மாற்றங்களுக்கு பொறுப்பாளர்கள் முழு ஒத்துழைப்பு தர வேண்டும் என விசிக தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக முகநூல் நேரலையில் அவர் பேசியதாவது, விசிக கட்சியின் கட்டமைப்பை மேலும் மேம்படுத்த, சட்டப்பேரவை தொகுதி வாரியாக மாவட்ட செயலாளர்களை நியமிப்பது என்று உயர்நிலைக் குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. அதனடிப்படையில், தற்போதுள்ள 144 மாவட்ட செயலாளர்களை மறுசீரமைப்பு செய்து சிலரை விடுவிக்க உள்ளோம். அதைத் தொடர்ந்து 144 மாவட்டச் செயலாளர்களுடன் மேலும் 90 புதிய செயலாளர்களை தொகுதி வாரியாக நியமிக்க உள்ளோம்.

சட்டப்பேரவை தொகுதி வாரியாக நியமிக்கப்படும் செயலாளர்கள், தொகுதி மாவட்ட செயலாளர்கள் என்றழைக்கப்படுவர். இதற்காக தற்போது மாவட்ட வாரியாக மறுசீரமைப்பு குழுக்களை நியமிக்க உள்ளோம்.

மது ஒழிப்பு மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை மக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில் மாநாட்டு தீர்மான விளக்க கூட்டங்களை மாவட்டத்துக்கு ஒரு கூட்டம் நடத்த வேண்டும்.

தீர்மானங்களை துண்டுப் பிரசுரங்களாக அச்சிட்டு மக்களிடம் விநியோகம் செய்ய வேண்டும். மாவட்ட செயலாளர்கள், மாநில பொறுப்பாளர்கள் இது தொடர்பாக கூடி முடிவு செய்ய வேண்டும். இவ்வாறு கட்சியில் எடுக்கப்படும் முடிவுகளுக்கும், மாற்றங்களுக்கும் நிர்வாகிகளும், தொண்டர்களும் முழு ஒத்துழைப்பு தர வேண்டும் என அவர் கூறினார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி