ஆயிரம் விளக்கு - Thousand lights

சென்னை: தனிப்பட்ட கொலைகள்: ஆர். எஸ். பாரதி விளக்கம்

சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர், கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராய இறப்பு சம்பவத்தில், தமிழக முதல்வர் துரித நடவடிக்கை எடுத்தார். 57 மருத்துவர்களை உடனடியாக சம்பவ இடத்துக்கு அனுப்பி வைத்ததுடன், மாவட்ட ஆட்சியர் மாற்றம், எஸ்பி சஸ்பென்ட். சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் கைது என நடவடிக்கைகள் பாய்ந்தன. ஆனால் எடப்பாடி பழனிசாமி, தான் யோக்கியரை போல, இந்த வழக்கில் மேல் முறையீடு செல்லக் கூடாது என்கிறார். சட்டம் ஓழுங்கு கெட்டுப் போச்சு என பேசுகிறார்.  அதிமுக ஆட்சியில் நடக்காத சம்பவங்களா? மத்திய அமைச்சராக இருந்த தலித் எழில்மலையின் மருமகன் சென்னையில் கொலை செய்யப்பட்டார். இரண்டு நாட்களுக்கு முன்புதான் அந்த வழக்கில் தீர்ப்பு கூட வந்தது. ஆக தனிப்பட்ட கொலைகளுக்கும் சட்டம் ஓழுங்குக்கும் சம்பந்தமில்லை. இதனை எடப்பாடி பழனிசாமி புரிந்துக் கொள்ள வேண்டும்.  ஓசூர் நீதிமன்றம் சம்பவம், தஞ்சையில் ஆசிரியை கொலை இரண்டும் தனிப்பட்ட விவகாரங்களின் அடிப்படையில் நடந்தவை. தூத்துக்குடி சம்பவத்தில் நடந்த உயிரிழப்புதான் சட்டம் ஓழுங்கு பிரச்சினை. தஞ்சை மற்றும் ஓசூரில் நடந்த சம்பவங்களை நியாயப்படுத்தவில்லை. உண்மையில் வருந்துகிறோம். அரசு நடவடிக்கை எடுத்தது. சில சம்பவங்கள் தவிர்க்க முடியாத நிலையில் உள்ளது என அவர் கூறினார்.

வீடியோஸ்


சென்னை