சென்னை: இப்படி பிள்ளை பெற்றுக் கொண்டால் கடும் நடவடிக்கை..!

55பார்த்தது
சென்னை: இப்படி பிள்ளை பெற்றுக் கொண்டால் கடும் நடவடிக்கை..!
வீட்டிலேயே பிரசவம் பார்க்கும் ஆர்வம் தற்போது சிலரிடையே பெருகி வருகிறது. இதனால் பல்வேறு ஆபத்துகள் ஏற்படக்கூடும் என்று அரசு பலமுறை எச்சரித்தும், நடவடிக்கை எடுத்தும் வருகிறது. இருப்பினும் வீட்டிலேயே பிரசவம் பார்ப்பது தொடர்ந்து நடந்து வருகிறது. 'வீட்டில் குழந்தைக பெற்றவர்களின் அனுபவம்' என்று வாட்ஸ் அப் குழு செயல்பட்டு வருகிறது. அதில் 1024 பேர் உறுப்பினர்களாக உள்ளனர்.

இந்நிலையில் தமிழ்நாட்டில் வீட்டில் வைத்து பிரசவம் பார்த்தாலோ அல்லது வாட்சப்பில் வரும் தகவல்களை வைத்து பிரசவம் பார்த்தாலோ சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது மேலும் கர்ப்பிணி பெண்கள் முறையாக மருத்துவ பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்றும், இதனை தீவிரமாக கிராம சுகாதார அலுவலர்கள் மற்றும் ஆரம்ப சுகாதார அலுவலர்கள் கண்காணிக்க வேண்டும் என்றும் சுகாதாரத்துரையால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி