வாடிக்கையாளர் மீது தாக்குதல்: போலீசார் விசாரணை

66பார்த்தது
வாடிக்கையாளர் மீது தாக்குதல்: போலீசார் விசாரணை
ராயப்பேட்டை, முத்தையா இரண்டாவது தெருவைச் சேர்ந்தவர் ஷாம் பிரதோஷ். டி. ஜி. வைஷ்ணவ் கல்லுாரியில் பி. ஏ. , படித்து வருகிறார்.

நேற்று முன்தினம் இரவு, நுங்கம்பாக்கத்தைச் சேர்ந்த அபுபக்கர், 30, என்பவருடன், திருவல்லிக்கேணி எல்லிஸ் சாலையிலுள்ள காரைக்குடி உணவகத்தில் உணவு வாங்க சென்றார். அப்போது, உணவு 'பார்சல்' தர ஊழியர்கள் காலதாமதம் செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து அபுபக்கர் கேட்ட போது, இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதில் ஆத்திரமடைந்த உணவக ஊழியர்கள் நால்வர், அபுபக்கர் மற்றும் ஷாம் பிரதோஷ் ஆகியோரை தாக்கினர். காயமடைந்த இருவரும், ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, திருவல்லிக்கேணி போலீசில் புகார் அளித்தனர்.

இதன்படி, உணவக ஊழியர்களான சிவா, சாந்தமூர்த்தி, பூபதி, முருகானந்தம், ஆகிய நால்வரை, நேற்று காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி