பெரம்பூர் - Perambur

19 மின்சார ரயில் சேவைகளில் மாற்றம்

19 மின்சார ரயில் சேவைகளில் மாற்றம்

சென்னை கடற்கரை யார்டில் பொறியியல் பணி நடக்கவுள்ளதால், 19 மின்சார ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட உள்ளன. சென்னை கடற்கரை - தாம்பரத்துக்கு செப். 13, 16 ஆகிய தேதிகளில் இரவு 8. 25, 8. 55, 10. 20 ஆகிய நேரங்களில் இயக்கப்படும் மின்சார ரயில்கள், திருவள்ளூர் - சென்னை கடற்கரைக்கு செப். 13, 16 ஆகிய தேதிகளில் இரவு 9. 35 மணிக்கு புறப்படும் மின்சார ரயில், சென்னை கடற்கரை - திருவள்ளூருக்கு அதே நாட்களில் இரவு 7. 50 மணிக்கு புறப்படும் மின்சார ரயில் முழுவதும் ரத்து செய்யப்படுகிறது. அதேபோல், கடற்கரை - அரக்கோணத்துக்கு செப். 14, 17 ஆகிய தேதிகளில் அதிகாலை 4. 05 மணிக்குபுறப்படும் மின்சார ரயில், கும்மிடிப்பூண்டி - கடற்கரைக்கு செப். 13, 16 ஆகிய தேதிகளில் இரவு 9. 55 மணிக்கு புறப்படும் மின்சார ரயில், கடற்கரை - கும்மிடிப்பூண்டிக்கு செப். 13, 16 ஆகிய தேதிகளில் இரவு10. 45 மணிக்கு புறப்படும் மின்சார ரயில் ஆகிய ரயில்களும் முழுவதும் ரத்து செய்யப்பட உள்ளன. சென்னை கடற்கரை - தாம்பரத்துக்கு செப். 13, 16 ஆகிய தேதிகளில் இரவு 11. 05, 11. 30, 11. 59 ஆகிய நேரங்களில் புறப்படவேண்டிய ரயில்கள், கடற்கரை - எழும்பூர் இடையே பகுதி ரத்து செய்யப்பட உள்ளன. சென்னை கடற்கரை - செங்கல்பட்டுக்கு செப். 14, 17 ஆகிய தேதிகளில் அதிகாலை 3. 50 மணிக்கு புறப்பட வேண்டிய மின்சார ரயில், கடற்கரை - எழும்பூர் இடையே பகுதி ரத்து செய்யப்பட உள்ளது.

வீடியோஸ்


சென்னை