பெரம்பூர் - Perambur

சேப்பாக்கம் மைதானத்தில் போராட்டம்: அர்ஜுன் சம்பத் கைது

சேப்பாக்கம் மைதானத்தில் போராட்டம்: அர்ஜுன் சம்பத் கைது

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று (செப்.,19) நடைபெற்று வரும் இந்தியா – வங்கதேசம் இடையேயான டெஸ்ட் போட்டியை தடை செய்ய கோரி போராட்டம் நடத்திய இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் உட்பட 15 பேர் கைது செய்யப்பட்டனர். போட்டியை தடை செய்ய கோரிய கடிதத்தை தமிழ்நாடு கிரிக்கெட் சங்க துணை செயலாளர் பாபா பெற்றுக் கொண்டாலும், போராட்டம் நடைபெற்ற இடத்தில் இருந்து போராட்டக் குழுவினர் கலைய மறுத்ததால் போலீசார் நடவடிக்கை மேற்கொண்டனர். வங்கதேசத்தில் நடந்த வன்முறையில் இந்துக்கள் சிலர் கொல்லப்பட்டதாக கூறி, டெஸ்ட் போட்டியை தடை செய்ய கோரி, தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்திடம் கடிதம் வழங்கப்பட்டது. கடிதத்தை பெற்றுக்கொண்டபோதும், தொடர்ந்து போராட்டம் நடத்தியதால், சம்பத் உள்ளிட்டோரை போலீசார் கைது செய்தனர்.

வீடியோஸ்


சென்னை
Sep 19, 2024, 15:09 IST/எழும்பூர்
எழும்பூர்

மூளைச்சாவு அடைந்த இளைஞரின் உடல் உறுப்புகள் தானம்

Sep 19, 2024, 15:09 IST
சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் மூளைச்சாவு அடைந்த இளைஞரின் உடல் உறுப்புகள் தானத்தால் 7 பேருக்கு மறுவாழ்வு அளிக்கப்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் பொதட்டூர்பேட்டையை சேர்ந்தவர் சுரேஷ் (18). ஜவுளி நிறுவனத்தில் தொழிலாளியாக பணியாற்றி வந்தார். நகரியில் சாலை விபத்து:  அவர், கடந்த 15-ம் தேதி ஆந்திர மாநிலம், நகரியில் நடந்தசாலை விபத்தில் சிக்கி தலையில் பலத்த காயமடைந்தார். இதையடுத்து, அருகில் உள்ள மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர் திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து, அவர் மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவ மனைக்கு மாற்றப்பட்டார். அவருக்குஃ மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்தநிலையில், நேற்று முன்தினம் (செப்.,17) மூளைச்சாவு அடைந்தார். அவரது உடல் உறுப்புகளை தானம் செய்ய அவரது தந்தையும், சகோதரிகளும் முன்வந்தனர். அவரது இதயம், இதய வால்வு, நுரையீரல், இரு சிறுநீரகங்கள், கால் எலும்பு, கல்லீரல், கண்கள் தானமாகப் பெறப்பட்டன. அதில், இதயம், கால் எலும்பு, ஒரு சிறுநீரகம் உள்ளிட்டவை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் நோயாளிகளுக்குப் பயன்படுத்தப்பட்டன. மற்ற உறுப்புகள் தகுதியின் அடிப்படையில் பிற மருத்துவமனைகளுக்கு வழங்கப்பட்டன. பின்னர், சுரேஷின் உடலுக்கு மருத்துவமனை வளாகத்தில் அணிவகுப்பு மரியாதை நடத்தப்பட்டு, அஞ்சலி செலுத்தப்பட்டது.