சென்னை: சூளைமேட்டில் செல்போன் லிங்க் மூலம் பணம் திருடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை சூளைமேட்டில் விஸ்வகுமார் என்பவர் தனது செல்போனுக்கு வந்த லிங்கை கிளிக் செய்தபோது பணம் திருடப்பட்டது. தனது வங்கிக் கணக்கில் இருந்து ரூ. 1, 98, 000 திருடு போனதாக விஸ்வகுமார் இன்று(செப்.12) புகார் தெரிவித்தார். ஐஸ் ஹவுஸில் சிவகணேஷ் என்பவரின் கிரெடிட் கார்ட் கணக்கில் இருந்து ரூ. 15, 000 பணம் திருடு போனது தெரியவந்துள்ளது.
போலீசார் தரப்பில் தினந்தோறும் ஆன்லைன் மோசடி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் நிலையில், மக்கள் மீண்டும் பணத்தை ஆன்லைனில் இழப்பது வாடிக்கையாக உள்ளது குறிப்பிடத்தக்கது.